வியாழன், 6 ஏப்ரல், 2017

தி.மு.கழகத்தின் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் !! அன்றும் !! இன்றும் !!






திராவிட முன்னேற்றக் கழக தலைவர் !!
முத்தமிழ் அறிஞர், கலைஞர் அவர்கள் !!
அன்றும் !! இன்றும் !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!

மிக நீண்ட கால அளவிற்குப்பிறகு, இந்த 
                    " பாலுவும் கலைஞரும் " 
என்ற வலைதளத்தில் கழகக் கண்மணிகள் 
மட்டுமல்ல, நடுநிலை சிந்தனையாளர்கள்.
மற்றும் கண்ணியம் மிக்க தமிழ்நாட்டின் 
அரசியல் ஆர்வலர்கள், ஆக இந்த ஒட்டுமொத்த
அரசியல் சார்ந்த நண்பர்களை சந்திப்பதில்,
அவர்களோடு ஒன்றுகலந்து சிந்திப்பதில் நான் 
உள்ளபடியே கூறுகிறேன் அன்பர்களே !! இந்த 
நல்ல தருணத்தில் என் இரத்த நாளங்களில் 
புத்தம்புது உதிரம், பீறிட்டுக்கொண்டுபாய்ந்திடும் 
உணர்வுகளை என்னால் உணர்ந்திட முடிகிறது 
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

அது 1971 ம் ஆண்டு. தலைவர் கலைஞர் அவர்கள் 
1969ம் ஆண்டு நிகழ்ந்த பேரறிஞர் அண்ணாவின் 
மறைவிற்குப்பிறகு தமிழ்நாட்டின் முதல்வராக 
பதவி ஏற்று திறம்பட தனதுசமுதாயப்பணிகளை,
தன்னை, தான் சார்ந்திருக்கும் திமுக வை நம்பி 
வாக்குகளை அளித்து அரசியல் சிம்மாசனத்தில் 
அமரவைத்திட்ட, இந்த அன்புத்தமிழ் சமுதாயத்தின்பெருமக்களுக்கு எப்படி எல்லாம் உழைத்து அவர்தம் வாழ்வினில் பல்வேறு சமூக, சமுதாய நற்பணிகளை செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்த காலம் அது.

அப்போது, மறைந்த பாரத பிரதமராக இருந்த உண்மை புரட்சித்தலைவி இந்திராகாந்தி பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் இன்னமும் ஓராண்டு மிச்சம் இருக்கும் வேளையில் 
தனக்கும் ( இந்திரா காந்தி ) இந்திய காங்கிரஸ் கட்சியின்முதல்நிலை தலைகள் ( மறைந்த நமது தமிழகத்தின் கர்ம வீரர் காமராஜர் உள்ளிட்ட 
வடபுல மாநிலங்களின் மிகமுக்கிய தலைவர்களை எதிர்த்து)  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை இருகூறுகளாகப் பிரித்து 
ஒன்று ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திரா தலைமையில் இருந்த குழுவினை, இந்திரா காங்கிரஸ் என்றும் அறிவித்து புதுடில்லி பாராளுமன்றத்தின் மக்களவையை திடீரென்று 
யாரும் எவரும் எதிர்ப்பார்த்திடாத ஒரு சூழலில் கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை எதிர்கொண்ட சூழலில், தலைவர் கலைஞர் அவர்களும், தனது சட்டமன்றத்திற்கான ஆயுள்காலம் இன்னும் 
ஓராண்டுஇருந்திடும்வேளையில்,தமிழக சட்டமன்றத்தைஇவரும் கலைத்துவிட்டு, ஒருசேர, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களை நடத்திட முன்வந்தார் தலைவர் அவர்கள். எதற்காக என்று கேட்டால், இரண்டுமுறை தேர்தல்கள் நடத்தினால், அதன் பயனாக, மக்கள்  வரிப்பணம்தானேவீணடிக்கப்படுகின்றது 
அதனைத் தடுத்திட வேண்டும் என்ற ஒரே பரோபகார சிந்தனையின் விளைவு அது. 
அப்போது அந்த 1971ம் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தினை தலைவர் 
கலைஞர் அவர்கள், முதல்முதலாக, மதுரை மாநகரின் மையப்பகுதியான 
மேலமாசிவீதி -- வடக்குமாசி வீதி சந்திப்பினில், மிகப்பிரம்மாண்டமானமேடைதனை அமைத்து, அங்கே தனது பிரச்சாரத்தினை தொடங்கினார் 
தலைவர் கலைஞர் அவர்கள். அதுபோது அடியேனுக்கு வயது 14.

(நான் 1965ம் ஆண்டில் நடைபெற்ற மொழிப்போராட்டத்திலேயே 
பங்கு பெற்றவன் அப்போது பள்ளி மாணவன் பால பாடம் படிக்கும் அந்தக்கால கட்டத்திலேயே திராவிட இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு 
கழகத்தில் என்னை  இணைத்துக்கொண்டவன் நான்.)

அந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஆண்டு பொதுக்கூட்டம் மாபெரும் மக்கள் வெள்ளத்தில், மறைந்த இசைமுரசு நாகூரார்
E.M. ஹனீபாவின்இசை நிகழ்ச்சியோடு கூட்டம்துவங்கியது.

பாடல் இதோ :-

******************************************************************************************************************************************************************


அண்ணாவின் பாதையிலே ஆட்சி நடக்குது !!
ஆளும் கலைஞர் சேவையிலே பணி சிறக்குது !!
பொன்னான காலம் நம்மைக்கூவி அழைக்குது !! 
பொறுப்புகளும்கடமைகளும்குவிந்துகிடக்குது !!
                                                                                                                                                                                     ( அண்ணாவின்)

தூங்கிக்கிடந்த சேலத்து இரும்பு விழித்துக்கொண்டது !!
தூத்துக்குடி துறைமுகமும் எழுந்து நிற்குது !!
பாவேந்தர் பாரதியின் உள்ளம் மகிழுது !!
பார்முழுதும் கலைஞராலே அமைதி பெருகுது !!

******************************************************************************************************************************************************************

அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

இப்படியெல்லாம் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து போன நமது தலைவர் கலைஞர் இப்போது நன்றாக ஓய்வு எடுத்து வருகிறார்.

" வர வேண்டிய நேரத்திற்கு மிகச் சரியாக                                      இங்கே வந்து நிற்பார் !!

என்ற கருத்தோடு உங்கள் அனைவரிடமும் இருந்து அன்பு வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.

கவிஞர். மதுரை. T.R. பாலு. 


புதன், 11 நவம்பர், 2015

தமிழ் இனத்தலைவர் கலைஞர் அவர்களை எனக்கு ஏன்,எதற்காக மிக,மிக பிடிக்கின்றது ? காரணம் என்ன ? இதனைப்பற்றிய ஒரு விளக்கக் கட்டுரை இது !!








பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலெக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் என் இனிய 

காலை வணக்கம்.

தமிழ்இனத் தலைவர் கலைஞர் அவர்களை 

எனக்கு ஏன், எதற்காக மிக மிக பிடிக்கிறது ?

இதுதான் இன்றைய கட்டுரையின் தலைப்பு.

முதல் காரணம் அவர் திராவிட இயக்கத்தின் 

முன்னணித் தலைவர்களான தந்தை பெரியார்,

பேரறிஞர்அண்ணா ஆகியோரதுவழிதோன்றிய 

அன்புத்தம்பி என்பதே ஆகும்.

அடுத்து ஆட்சி நிர்வாகம் பற்றி மிகத் தெளிவான 

முடிவுகளை உடனுக்குடன் எடுத்து அதனை 

அமல் செய்திடும் ஆற்றல் படைத்தவர். 

பேரறிஞர்சொன்னது போல எதையும் தாங்கும் 

இதயம் கொண்ட ஒரு அரசியல் தலைவர்.

சொல்வதை செய்வதிலும் செய்வதை மட்டும் 

சொல்வதிலும் ஆக்க பூர்வமாக நடைமுறையில் 

நடத்திக் காட்டியவர் என்பதாலும் மிகவும் 

பிடிக்கும்.

ஊழி பெயரினும்தான்பெயரார்சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்...


என்ற வள்ளுவன் வகுத்த குறள் போல இந்த 

உலகமே பெயர்ந்து சுக்குநூறாக உடைந்தாலும் 

தான் கொண்ட கொள்கையில் மிகவும் 

உறுதிப்பாட்டுடன் வாழ்க்கைதனை வகுத்து 

அதன்படியே வாழ்ந்தவர் என்பதால் எனக்கு 

மிகவும் பிடிக்கும். 

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். 

முடியவில்லை 

காரணங்கள்.பக்கங்கள் போதாது.

நன்றி. வணக்கம்.

அன்புடன். திருமலை.இரா. பாலு.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

கலைஞர் அவர்கள் செய்திட்ட இமாலயத் தவறுகள் பல... அவற்றுள் நான் குறிப்பிடுபவை சில..







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம்  !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


இப்போது ஒரு ஆலமரத்தைப்பற்றி ஒரு 
அருகம்புல் விமர்சனம் செய்திடப் போகுது.
ஆம். நான் சொல்வது உண்மை. கலைஞர் 
எவ்வளவு பெரிய மா மனிதர். திராவிட 
உணர்வுகளை அறிஞர் அண்ணா மறைவிற்கு 
பிறகு அழிந்திடாமல், தமிழ் மொழியை
வட இந்தியாவின் இந்தி ஆதிக்க வெறியர்கள் 
பிடியில் இருந்து  காப்பாற்றிட தனது உடல் 
பொருள் ஆவி அத்தனையையும் செலவு 
செய்த மகா மகா உண்மைத் தமிழர். 

ஆனாலும் என்ன செய்வது. அவரும் மனிதர்தானே.அவரையும் அறியாமல் அரசியலிலும் சரி அவரது வீட்டிலும் சரி அவர் செய்த தவறுகளால் என்னென்ன நிகழ்ந்தன என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை இது. 

கழகக் கண்மணிகள் என்னை மன்னித்தருள வேண்டுகிறேன். நன்றி.


அரசியலில் கலைஞர் செய்த தவறுகள் :-

அது 1971 ம் ஆண்டு. இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முதலாக, இந்தியப் பாராளுமன்றம் தனது முழு 5 ஆண்டுகால வாழ்நாளிற்குப் பதிலாக அதாவது 
1967ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற
அவைக்கு 1972ம் ஆண்டுதான் தேர்தல் வந்திருக்க வேண்டும். ஆனால் ஓராண்டுக்கு முன்பாகவே 1971ம் ஆண்டே தேர்தல் வரக்காரணம் என்னவென்றால்  அப்போதைய 
பிரதமர், " உண்மையான " புரட்சித்தலைவி என்று அந்நாளில் அழைக்கப்பட்ட இந்திராகாந்தி அம்மையார் கொண்டு வந்த புரட்சிகராமான திட்டங்களான மன்னர் மானிய ஒழிப்புத் திட்டம், வங்கிகள் தேசிய உடைமையாக்குதல் போன்ற முன்னேற்றமான இந்திரா காந்தி ஒன்டுவந்த திட்டங்களை முடக்கிட நினைத்த காங்கிரசில் உள்ள பழம் பெருச்சாளிகளுக்கு நடுவிலே தன்னுடைய முயற்சிகள்முடங்கித்தான் 
போகும் என்று முடிவெடுத்த இந்திராகாந்தி ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலை நடத்திடவேண்டும் என்று எண்ணி பாராளுமன்றத்தினைக் கலைத்ததோடு அவர் 
அகில இந்திய காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து தனது கட்சிக்கு " இந்திரா காங்கிரஸ் " என்றும் பெயரிட்டார்.

அப்போது தமிழகத்தில் கலைஞர் அவர்கள் முதல்வராக பணியாற்றிக்கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை அவரும் தனக்கு சாதகமாக 
பயன்படுத்திக் கொள்ள நினைத்து  தமிழ்நாடு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டார். 

இங்கேதான் அவரது அரசியல் சாணக்கியத்தனம் பாதி வெற்றியும் பாதி  தோல்வி அடைந்ததையும் அந்நாளில் என்போன்ற அரசியல் 
ஆர்வலர்களால் அறிந்துகொள்ளப்பட்டது. 

                                                                                                                                                                             (இன்னும் வரும்) ஆம் நேயர்களே.  

அந்த பாராளுமன்ற தேர்தலில் கலைஞர் அவர்களிடம் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள அன்னை இந்திரா விரும்பினார். இதற்காக மறைந்த C.சுப்பிரமணியம் போன்ற முன்னணித் தலைவர்களை தமிழகத்திற்கு அனுப்பி தேர்தல் கூட்டணி பற்றி பேசிட அனுப்பிவைத்தார் அவர். அப்போது அவர்களிடம் கலைஞர் அவர்கள் என்ன கூறியிருந்தார் என்றால், நீங்கள் இப்போது புதிதாக துவங்கப்பட்ட ஒரு கட்சி. உங்கள் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டியது மையத்தில் ( டெல்லியில்) ஆட்சியை பிடிக்கவேண்டிய ஒன்று மட்டுமே. எனவே தமிழ்நாட்டில் இருந்து பத்து இடங்கள், பாண்டிச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்று ஆக மொத்தம் 11 நாடாளுமன்ற இடங்கள் மட்டும் உங்களுக்கு வழங்கிடப்படும். சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லை. இதற்கு சம்மதம் என்றால் கூட்டணி இல்லை என்றால் இல்லை என்று கண்டிப்பாக கூறிடவே, வேறு வழிஇன்றி அவர்களும் சம்மதிக்க, தேர்தலில் டெல்லியில் இந்திராவும், தமிழகத்தில் கலைஞரும் அமோக வெற்றி பெற்றனர், பின்னாளில் என்ன நடைபெற உள்ளது என்பதனை அறிந்திடாமல். 


தங்களுக்கு சட்டமன்றத்தில் ஒரு இடம்கூட தர மறுத்த தலைவர் கலைஞர் அவர்களை எப்படியாவது பழி வாங்கிடவேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்த இந்திரா காங்கிரசுக்கு சுளையாக கிடைத்தது, மத்திய அந்நியச்

செலாவணி முறைகேடுகள் இயக்கக அறிக்கை. அதில், மறைந்த MGR உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிக்கு ஜப்பான் சென்றிருந்த போது அவர் செய்த அந்நியச் செலாவணி மோசடிகள் பற்றிய தெளிவான அறிக்கை. இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்திருந்த காங்கிரஸ் அப்போதைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் புரட்சி நடிகரும் ஆகிய MGR ஐ நேரில் அழைத்து, தாங்கள் என்ன செய்வீர்களோ எங்களுக்குத் தெரியாது, ஆனால் தி.மு.க. வை உடைத்து வெளியே வந்து தனிக் கட்சி அமைத்தே தீர வேண்டும் என்று ஒரு கடும் உத்தரவு ஒன்றினை பிறப்பிக்க, அதன்படியே வேறு வழிஇன்றி அவரும் செயல்பட, கட்சி இரண்டாக உடைந்து அண்ணா தி.மு.க. உருவானது. இதுதான் தலைவர் கலைஞர் அவர்கள் அந்நாளில் அரசியலில் செய்த மாபெரும் இமாலயத் தவறுகளுள் தலையானதாக கருதிடப்பட்டது.       


                                                                       (இன்னும் வரும்)

புதன், 22 அக்டோபர், 2014

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மூட்டைகட்டி ஓரங்கட்டிய கலைஞரின் அரசியல் சாணக்கியத்தனம் பற்றிய ஒரு அலசல் கட்டுரை இது !!





பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் வணக்கம். அது 1971 ம் 


ஆண்டு. அப்போது பிரதமராக இருந்த 


உண்மையான புரட்சித் தலைவி இந்திரா 


காந்தி அம்மையார் அவர்கள் கொண்டு 


வந்த சமூக சீர்திருத்த, யதேச்சிகாரத்திற்கு


பணக்கார முதலைகளின் ஆதிக்க உணர்வு

இவைகளுக்கு சாவுமணி அடித்திடும் 


வண்ணம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்த 

மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் மற்றும் 

பொது காப்பீட்டு நிறுவனங்களை தேசிய 

உடைமை ஆகிய சட்டங்களின் காரணமாக 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இரண்டாக, 


ஸ்தாபன காங்கிரஸ் என்றும் இந்திரா 


காங்கிரஸ் எனவும் உடைந்த நேரம் அது. 


ஓராண்டு கழித்து நடைபெற்றிருக்க வேண்டிய 

பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே 

அதாவது 1971 ம் ஆண்டே நடத்திட முடிவு 

செய்தார் உண்மையான அன்னை இந்திரா 

காந்தி அவர்கள். அப்போது தமிழ்நாட்டில் 

தி.மு.க/வும் சட்டமன்றத்தினைக் கலைத்து 

விட்டு தேர்தல் நடத்திட முடிவு செய்தது.

கூட்டணி அமைத்துக்கொள்வோம் என்று 

பேசிட வந்தனர் அப்போதைய நிதித்துறை 

அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த 

மறைந்த C. சுப்பிரமணியம். அப்போது 

தலைவர் கலைஞர் அவர்கள், என்னசொல்லி 

அவர்களை அந்தக் கட்சியை அமுக்கினார் 

என்றால், நீங்கள் புதிதாகக் கட்சியைத் 

தொடங்கி உள்ளீர்கள். உங்களுடைய முக்கிய 

நோக்கமாக இருக்க வேண்டியது எப்படி 

பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவது என்பதில்

மட்டுமே இருக்க வேண்டுமே ஒழிய மாநில 

அரசியலைப் பற்றி கவலைப்பட வேண்டாம் 

என்று சொன்னதோடு இல்லாமல் தலைவர் 

கலைஞர் அவர்கள் மொத்தம் 11 பாராளுமன்றத் 

தொகுதிகளை ( தமிழகத்தில் 10ம் பாண்டிச்சேரி 

ஒன்றும்) தருகிறேன். தமிழக சட்டமன்றத்திற்கு 

ஒரு இடம்கூட தர முடியாது என்று சொன்னார்.

அதனால் அன்றைக்கு முடங்கிப்போன 

காங்கிரஸ் கட்சி மூட்டைகட்டி ஓரங்கட்டப் 

பட்டது. இன்றளவும் அதனால் தனித்து இயங்க 

முடியவில்லை. இதுதான் கலைஞர் அவர்களின் 

அரசியல்்சாண்க்கியத்தனந்த்தின் வெளிப்பாடுக

ளில் ஒன்றென இன்றளவும் எங்களைப் போன்ற 

அரசியல் ஆர்வலர்களால் பேசப்பட்டு வருகிறது.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை. இரா. பாலு.


(மதுரை T.R. பாலு.

வியாழன், 18 செப்டம்பர், 2014

வண்டு துளைத்த கனி எனவே தூக்கி எறிந்துவிட்டேன் !! 1971ம் ஆண்டு கலைஞர் சொன்னது யாரைப்பற்றி என்று தெரியுமா உங்களுக்கு ?






பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!                                             



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!                                       


உங்கள் அனைவருக்கும் எனது காலை 


வணக்கங்கள் உரித்தாகட்டும் !!                                       


அது ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபத்தி

ஒன்றாம் ஆண்டு. புரட்சி நடிகர் என்று கலைஞர் 


அவர்களால் பட்டம் பெற்ற மறைந்த MGR 


கழகத்தின் பொருளாளராக பதவி வகித்து 


வந்தார். அப்போதைய இந்திரா காங்கிரஸ்


கொடுத்த அழுத்தத்தினால் (அப்போது உலகம் 


சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்க M.G.R. 


ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த போது 


டோக்கியோ நகரின் எக்ஸ்போ-7௦ என்ற 


கண்காட்சியில் சிலை காட்சிகள், பல 


பாடல்காட்சிகள் என எடுக்கப்பட்டு இருந்தது 


அந்தப் படத்திற்காக. அப்போது 


அந்நியச்செலாவணியில் சில மோசடிகள் MGR 


பிக்சர்ஸ் நிறுவனத்தால் செய்யப்பட்டு இருந்தது. 


இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு இந்திரா 


காங்கிரஸ் கட்சி பயமுறுத்தியது எம்.ஜி.ஆரை.) 


இவரின் (MGR) உதவியோடு கழகத்தை பிளக்க 


இந்திரா காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்திருந்த 


நேரம் அது. 


அப்போது மதுரையில் திராவிட முன்னேற்றக் 


கழகத்தின் மதுரை மாவட்ட மகாநாடு நடந்த 


நேரம். 3 நாட்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் 


மாநாடு நடந்து முடிவுறும் நேரம். கடைசி நாள் 


நிகழ்ச்சி. அப்போது இறுதியாக கழகத்தலைவர் 


கலைஞர் அவர்கள் மாநாட்டினை 


முடித்துவைத்து உரைநிகழ்த்த அவர் காத்திருந்த 


நேரம். அவருக்கு முன்பாக MGR உரை 


நிகழ்த்துகிறார். வீராவேசமாக உரை ஆற்றி 


தமிழகத்து ஒரு தீங்கு என்றால் நான் 


இராணுவத்தை சந்திப்பேன் என்று வீரவசனம் 


பேசி தனது உரையை முடித்தார் மறைந்த 


எம்.ஜி.ராமச்சந்திரன். கூட்டம் கொஞ்சம் 


கொஞ்சமாக எழுந்து நின்று கலைய 


ஆரம்பித்தது.  MGR மாநாட்டு மேடையை விட்டு 


எழுந்து தான் தங்கியிருந்த பாண்டியன் 


ஹோட்டல் சென்று விட்டார். தலைவர் கலைஞர் 


பேச்சை கேட்க அவர் ஆர்வம் காட்ட வில்லை. 


இதைப்பார்த்த கலைஞர் சற்று மயக்கமுற, 


மேடையில் இருந்த அனைவரும் மிகவும் 


விசனப்பட்ட நிலையில், ஒருவாறாக 


நிலைமையை சமாளித்து தனது உரைதனை 


ஆற்றி முடித்து மகாநாட்டினை நிறைவு செய்தார் 


தலைவர் கலைஞர். மறுநாள் சென்னை 


வந்தடைந்தார்.   நான்கு, ஐந்து நாட்கள் கழித்து 


கழகத்தின் பொருளாளர் எம்.ஜி.ஆர். கணக்கு 


கேட்கிறேன் என்று பொதுக்கூட்டத்தில் 


 பேசுகிறார். இது தி.மு.க.விற்கு மேலும் 


நெருக்கடி கொடுத்தது. அப்போது கழகத்தின் 


செயற்குழு அவசரமாக கூடி இந்த நிலைபற்றி 


ஒரு நாள் முழுவதும் பேசியது. கழகப் 


பொதுச்செயலாளராக நாவலர் நெடுஞ்செழியன் 


பதவி வகித்து வந்தார். ( இவரது மனதில் ஒரு 


ஆறாத புண் இருந்து வந்தது. அது என்ன என்று 


கேட்டால், பேரறிஞர் அண்ணா மறைந்த நேரம், 


கழகத்திற்கு யார் தலைமை வகித்து 


முதலமைச்சர் பதவியை யார் வகிப்பது என்று 


கழகத்தின் மேழ்மட்டத்தலைவர்கள் 


ஒருவருக்கொருவர் ஆலோசித்துகொண்டிருந்த 


நேரத்தில், M.G.R. மிகவும் துணிச்சலாக தலைவர் 


கலைஞர் பெயரினை முன்மொழிந்தார். 


கழகத்தின் தலைவர்கள் மூத்தவரிசையில் தாம் 


இரண்டாம் நிலையில் இருந்திட்ட போதிலும் 


மூன்றாம் நிலையில் இருந்த தலைவர் கலைஞர் 


பெயரை எம்.ஜி.ஆர். முன்மொழிந்ததால் 


அவரின்மீது நாவலர் நெடுஞ்செழியனுக்கு 


இருந்த ஆறாத புண், அதற்கு பழிவாங்க 


சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த நாவலர் 


மருந்து தேடிடும் விதமாக, பழி வாங்கிவிட்டார்.) 


கழகத்தின் செயற்குழு பேசி வைத்திருந்த 


முடிவினை தலைமையின் ஒப்புதலின்றி 


பத்திரிகைகளுக்கு அறிக்கை தந்து விட்டார் 


நாவலர் நெடுஞ்செழியன் , என்ன அறிக்கை 


என்று கேட்டால், கழகத்தின் பொருளாளர் பதவி 


வகித்து வைத்த எம்.ஜி.ஆர். கழகத்தைவிட்டு 


அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து 


பதவிகளிலும் இருந்து தற்காலிகமாக 


நீக்கப்பட்டார் ( DISMISS) இதுதான் 


நாவலர் செய்த நன்மை தி.மு.க. விற்கு. 


செய்தியைப் படித்த தலைவர் கலைஞர் அதிர்ந்து 


போய் நாவலரைத் தொலைபேசிமூலம் தொடர்பு 


கொண்டு கேட்டபோது, நாம் பேசி எடுத்த 


முடிவுதானே இது என்று சொல்லிவிட்டு, உடனே 


தொலைபேசி இணைப்பினைத் துண்டித்து 


விட்டார் நாவலர். (இது எப்படி இருக்கு)               


அன்று மாலை பத்திரிக்கையாளர்கள் கூட்டம், 


தலைவர் கலைஞரை அண்ணா 


அறிவாலயத்தில் சந்தித்து எதற்காக MGR 


கட்சியை விட்டு சஸ்பென்ட் செய்யப்பட்டார் ? 


பேரறிஞர் அண்ணாவினால் MGR எனது 


இதயக்கனி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் 


ஆயிற்றே ? ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டார்? 


என்ற கேள்விகளுக்கு தலைவர் கலைஞர் 


அளித்த பதில்தான் கட்டுரையின் தலைப்பாகத் 


தரப்பட்டு உள்ளது.                                                             




வண்டு துளைத்த கனி !! எனவே 


தூக்கி எறிந்து விட்டேன் !!                                                                         



நன்றி !! வணக்கம் !!                                                               



அன்புடன் மதுரை T.R. பாலு.

புதன், 20 ஆகஸ்ட், 2014

தமிழ் இனத்தலைவர் கலைஞர் எழுதிய பாடலைப்பாட மறுத்த மறைந்த பக்திப்ப் பாடகி K.B.சுந்தராம்பாள் !!








பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!




அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



கலைஞர் திரு மு.கருணாநிதி அவர்களின்


கைவண்ணத்தில் உருவான காவியத்திரை


படம்தான் " பூம்புகார் "  அதில் கோவலனாக


இலட்சிய நடிகர் SS இராஜேந்திரனும்


கண்ணகியாக அவரது மனைவி விஜயகுமாரி


அவர்களும், கவுந்தியடிகள் வேடத்தில்


மறைந்த KB. சுந்தராம்பாள் நடித்தார். அதில்


ஒரு பாடல் காட்சி ( கலைஞர் எழுதிய பாடல்)


கோவலன் மதுரைநகரில் கொலையுண்ட


சேதி கேட்டு கொதித்தெழுந்து அவர் பாடும்


பாடல். A.V.M.ஸ்டூடியோவின் ஒலிப்பதிவுக்


கூடத்தில் பாடல் பதிவு. அன்று கலைஞர்


அவர்கள் சேலம் சென்றுவிட்டார். பாடல்


வரிகளைப் படித்த சுந்தராம்பாள் தம்மால்


இந்தப் பாடலைப்பாட முடியாது என்று


சொல்லிவிட்டார். அப்படி அந்த பாடல் 


வரிகளில் என்னதான் இருந்தது ? இதோ 


நீங்களே படித்துப்பாருங்கள் அந்தப்பாடலை:-



அன்று கொள்ளும் அரசின் ஆணை 

வென்று விட்டது !!

நின்று கொல்லும் தெய்வம் எங்கோ 

சென்று விட்டது !!



இதுதான் அந்தப்பாடலின் வரிகள்.


திருமதி சுந்தராம்பாள் அவர்கள் நிரம்ப 


தெய்வபக்தி உள்ளவர்கள். தெய்வம் 


எங்கோ சென்று விட்டது என்று அவரால் 


எப்படி பாடிட இயலும். இதுதான் கேள்வி.


தகவல் பறந்தது சேலத்தில் உள்ள தலைவர் 


கலைஞர் அவர்களுக்கு. விஷயம் 


முழுவதையும்  கேட்டறிந்து நாளை தான் 


சென்னை வந்து விடுவதாகவும் இந்தப் 


பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் 


என்று சொன்னார் கலைஞர். சொன்னதுபோல 


மறுநாள் சென்னை வந்த அவர், நேரே A.V.M.


ஒலிப்பதிவு கூடத்திற்கு சென்று அந்தப் 


பாடலின் வரிகளைக் கீழ்க்கண்டபடி மாற்றி 


எழுதித் தந்திட பாடலை திருமதி சுந்தராம்பாள் 


மறுப்பு எதுவும் சொல்லாமல் பாடி முடித்தார்.


மாற்றி அமைக்கப்பட்ட வரிகள் இதோ :-


அன்று கொல்லும் அரசின் ஆணை 

வென்று விட்டது !!

நின்று கொல்லும் தெய்வம் இங்கே 

வந்து விட்டது !!


பார்த்தீர்களா நேயர்களே !!  தலைவர் கலைஞர் 


அவர்கள் வார்த்தைகளை எப்படி மாற்றி எழுதி 


பிரச்சினையை தீர்த்து விட்டார். அதனால்தான் 


அவர் முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கப்


படுகின்றார். 



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை TR. பாலு.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

கலைஞரின் இரட்டை அர்த்த வசனமும் அதன் அர்த்தமும் !!






பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் அன்பு நிறைந்த இதயம் 


கனிந்த நல் வாழ்த்துக்களுடன் கூடிய 


வணக்கங்கள் உரித்தாகுக.


கலைஞர் அவர்களின் எழுத்து ஆற்றலைப்பற்றி 


எழுத வேண்டும் என்றால், அதற்கு எனக்கு 


இந்த ஒரு பிறவி போதாது என்றே சொல்லிட 


வேண்டும். ஆம் அன்பர்களே !!



ஒருசமயம் பாலைவன ரோஜாக்கள் என்னும் 


வண்ணக்காவியம், தலைவர் கலைஞர் 


அவர்களின் கதை,திரைக்கதை, வசனம்


போன்ற சிறப்புக்களுடன் உருவாகிய ஒரு 


நல்ல தமிழ்த் திரைப்படம்.


அந்தப் படத்தில் ஒரு காட்சி :-


அது ஒரு கூட்டத்தினருடன் குழுமி ஆடல்,


பாடலுடன் கூடிய காட்சி அது. அதற்கு 


ஆடல் கலைக்கு பேர் பெற்ற மார்வாடிப் 


பெண்கள் வைத்து எடுத்தால் காட்சி மிகவும் 


சிறப்பாக இருக்கும் என்று தலைவர் படத்தின் 


இயக்குனரிடம் கூறி இருந்தார். அந்த பாடல் 


ஆடல் காட்சி படமாகாப்பட்டது எப்படி ?


தலைவர் சொன்னதுபோல மார்வாடிப் பெண்கள் 


கலந்து கொள்ள, படம் எடுக்கப்பட்டது. படத்தில் 


வரும் அந்தக் காட்சியை கலைஞருக்கு போட்டுக் 


காட்டினார்இயக்குனர்.படத்தைப்பார்த்தகலைஞர் 

கருத்துஎதும்சொல்லிடாமல்,அரங்கினைவிட்டு 


வெளியே வரும்போது இயக்குனர் இடைமறித்து 


என்ன தலைவரே ஒன்றும் சொல்லாமல் எங்கே 


செல்கிறீர்கள் தாங்கள் சொன்னது போல 


மார்வாடிப்பெண்கள்தானே நடித்துள்ளார்கள் 


என்று கேட்டார்.


உடனே தலைவர், நான் சொன்னதும் சரிதான். 


நீங்கள் செய்ததும் சரிதான். ஆனால் நான் 


சொன்னதோ மார்வாடிப் பெண்கள். 


தாங்கள் செய்ததோ மார்வாடிய பெண்கள் 


என்றாரே பார்க்கலாம். அரங்கமே சிரித்து 


அந்த சிரிப்பு அலை அடங்கிட சுமார் 5 


மணித்துளிகள் ஆனது என்றால் 


பார்த்துக்கொள்ளுங்கள்.


என்னே தலைவரின் ஆற்றலும் திறனும்.



நன்றி வணக்கம் 



அன்புடன் மதுரை TR.பாலு.